கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் சங்க மண்டல மாநாடு

கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள் சங்க மண்டல மாநாடு நடந்தது.

Update: 2022-04-24 18:37 GMT
கரூர்
கரூர், 
கரூரில் தமிழ்நாடு கிராம மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க மண்டல கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதற்கு வரவேற்புக்குழு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு செயலாளர் சங்கப்பிள்ளை வரவேற்றார். மாநில தலைவர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார். இதில் கொரோனா பணிக்கு முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு தமிழகம் முழுவதும் வேறுபாடின்றி ஒரே மாதிரியான ஊதியம் ரூ.7,040 வழங்க வேண்டும், குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில்,   மாநில தலைவர் ரமேஷ், மாநில பொதுச்செயலாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்