தூக்குப்போட்டு பெண் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-04-24 18:36 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் போலீஸ் சரகத்தை சேர்ந்த சுந்தரபாண்டியத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி சாந்தி (வயது 39). இவர்களுக்்கு  திருமணமாகி 12 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் இவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி  வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்