2 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருவிழா

வத்திராயிருப்பு அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-04-24 18:36 GMT
வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திருவிழா நடைபெற்றது. 
கோவில் விழா 
வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில் எராக்கம்மாள், அழகம்மாள், வீரம்மாள் ஆகிய முப்பெரும் தேவியரின் கோவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த கோவிலில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை தினமும் நடைபெற்றது. 
சாமி தரிசனம் 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சக்தி ஆடு அழைப்பு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. .
எராக்கம்மாள் கோவிலில் இருந்து சக்தி ஆடு மீண்டும் அழகம்மாள் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு பலியிடப்பட்டது. பின்னர் அதனை சமையல் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்