பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; போலீசில் புகார்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை நடந்தது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-24 18:27 GMT
கரூர்
கரூர், 
கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சுவேதா (வயது 27). இவரது கணவர் வருண் (33). இந்தநிலையில் வருண் மற்றும் அவரது தந்தை அய்யாசாமி (60), தாய் பிரபா (58), வருணின் சகோதரி சுஸ்மிதா (28) ஆகிய 4 பேரும் சேர்ந்து சுவேதாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுவேதா கொடுத்த புகாரின்பேரில் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி, வருண் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்