செவித்திறன் குறைவு குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
செவித்திறன் குறைவு குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
வாலாஜா
வாலாஜா நகராட்சி சவுராஷ்டிரா தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று வயதுக்குட்பட்ட செவித்திறன் குறைபாடு உள்ள இளம் சிறார்களுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.
பயிற்சி மையத்தினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், முதன்மை செயல் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், வாலாஜா நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை உள்பட பலர் கலந்து கொண்டனர்.