நர்சை கடத்தியவர் மீது வழக்கு

நர்சை கடத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-04-24 18:05 GMT
பேரையூர், 
டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகள் புவனேஸ்வரி (வயது 23). இவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் பாதனக்குறிச்சியை சேர்ந்த மாயா என்ற மாயகிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் இருந்து உள்ளது. இதனால் புவனேஸ்வரியை அவரது பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த புவனேஸ்வரியை மாயகிருஷ்ணன் கடத்தி சென்று விட்டார் என்று பாண்டி டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்