அரிவாளை காட்டி பெண்ணிடம் பணம்- செல்போன் பறிப்பு

பட்டுக்கோட்டையில் அரிவாளை காட்டி பெண்ணிடம் பணம், செல்போனை பறித்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-04-24 18:30 GMT
பட்டுக்கோட்டை:-

பட்டுக்கோட்டையில் அரிவாளை காட்டி பெண்ணிடம் பணம், செல்போனை பறித்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

கட்டிட தொழிலாளி

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆவணம் ரோட்டை சேர்ந்தவர் அருண்குமார். அவருடைய மனைவி ரேவதி (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று பட்டுக்கோட்டைக்கு வேலைக்காக சென்றார். ஆனால் வேலை இல்லாததால் பட்டுக்கோட்டை முடிபூண்டார் நகரில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு மாலை 4 மணி அளவில் வெளியே வந்தார். 
அப்போது அந்த பகுதியில் அரிவாளுடன் வந்த 3 பேர் திடீரென ரேவதியின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி அவரிடமிருந்த செல்போன், அவர் அணிந்திருந்த கவரிங் செயின், ரூ.1,000 ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

2 பேருக்கு வலைவீச்சு

உடனே ரேவதி கூச்சல் போடவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஒருவரைப் பிடித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பட்டுக்கோட்டை தெற்கு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (23) என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் வந்தவர்கள் முடிபூண்டார் நகரை சேர்ந்த பிரேம், வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஹரி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரேவதி கொடுத்த புகாரின் பேரில்  ஹரிஹரனை கைது செய்து அவரிடமிருந்து 3 செல்போன்கள், கவரிங் செயின், அரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பிரேம், ஹரி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்