கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

கொடைக்கானலில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-04-24 18:03 GMT
திண்டுக்கல்: 

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மங்களபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி அனைவரையும் வரவேற்றார். மாநில துணை தலைவர் வேலாயுதம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாநில பொதுச்செயலாளர் செல்லையா வேலை அறிக்கையையும், பொருளாளர் பட்டாபிராமன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.
இந்த கூட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கூட்டுறவு சார் பதிவாளர்கள், கள அலுவலர்கள் ஆகியோரை நிர்வாக செயல் இயக்குனர்களாக நியமனம் செய்ய வலியுறுத்தும் பதிவாளரின் சுற்றறிக்கையை செயல்படுத்தக்கூடாது. பணியாளர்களுக்கு கால அவகாசம் கொடுக்காமல் புள்ளிவிவர பட்டியலை உடனடியாக கேட்பதை கைவிட வேண்டும். பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருத்தில் கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தின் மாநில நிர்வாகி பிச்சைவேலு, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்