ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி ஒன்றியங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள்

ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி ஒன்றியங்களில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

Update: 2022-04-24 17:43 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 38 ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஏலகிரிமலை ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அ.திருமால் வரவேற்றார். 

வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இதில் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். 

அப்போது இங்குள்ள மலைவாழ் மக்களின் அடிப்படைதேவைகள் குறித்து மனு அளித்தால் துறை சார்ந்த அதிகாரிகளிடம் அணுகி உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து விவசாயிகளுக்கு கிசான் கார்டு பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மேலும் இங்குள்ள 14 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் அந்தந்த பகுதிக்கு தேவையான வசதிகள் குறித்து மனு அளித்தனர். 
கிராமசபை கூட்டத்தில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், மருத்துவர் சுமன் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை அருகே அம்மையப்பன் நகர் ஊராட்சியில்   ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டம் உறுதி மொழி ஏற்கப்பட்டது. சின்னகம்பியம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் உமாராணி ஞானமோகன் தலைமை தாங்கினார்.  பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றனர். அதன் பிறகு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதேபோல் ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்