விருத்தாசலத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல்கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. இதற்கு வட்ட குழு உறுப்பினர் அய்யப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெயபால், பீர்முகமது, தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலையை குறைத்திடவும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய கோரியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.