டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு

வருகிற 1-ந்தேதி விழுப்புரம் வருகை தரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-04-24 17:00 GMT
விழுப்புரம், 

பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் வருகிற 1-ந் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதையொட்டி விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் புகழேந்தி, பாவாடைராயன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் பழனிவேல், மணிமாறன், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் பாலசக்தி, ஜெயராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். மாவட்ட தலைவர் தங்கஜோதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் விழுப்புரம் நகரமன்ற கவுன்சிலர் இளந்திரையன், நகர நிர்வாகிகள் பெருமாள், ராஜா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், விழுப்புரம் வருகை தரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.க்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை சிறப்பான முறையில் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்