சாந்தகுணமாரியம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்

திருத்துறைப்பூண்டி அருகே சாந்தகுணமாரியம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்

Update: 2022-04-24 17:00 GMT
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் சாந்தகுண மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும்  சாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பாரதி நகர் மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்