டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி 27-ந் தேதி முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை மகாதானத்தெரு டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி 27-ந் தேதி முற்றுகை போராட்டம் பா.ஜ.க. சார்பில் நடக்கிறது

Update: 2022-04-24 16:59 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மகாதானத்தெருவில் ஆஸ்பத்திரிகள், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ளன. பள்ளி-கல்லூரிக்கு மாணவிகள் செல்லும்போதும், திரும்பும்போதும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் மது குடித்து விட்டு சிலர் தகராறு செய்கின்றனர். இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கடந்த டிசம்பர் மாதம் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியபோது விரைவில் மாற்றி விடுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படவில்லை. ஆகவே, மகாதானத்தெரு டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி வருகிற 27-ந் தேதி(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில், மாநில செயலாளர் தங்க வரதராஜன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்