945 அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 945 அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-04-24 16:57 GMT
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 945 அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
பள்ளிகளை மேம்படுத்த
பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளி வளர்ச்சிக்கு துணை நிற்கவும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி பள்ளி மேலாண்மைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. நம் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்திடவும் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும், பெற்றோர்களின் பங்கேற்பு மிக முக்கியமானது என்று கல்வி உரிமை சட்டம் வலியுறுத்துகிறது.
மேலாண்மைக்குழு கூட்டம் 
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 945 அரசு தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு, கிராமப்புற மாணவர்களின் கல்வியின் முன்னேற்றம், பள்ளியின் வளர்ச்சி குறித்து தகவல் வழங்கினர். 
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகராட்சி கவுரிசாமி நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைமையாசியர் பிரபாவதி தலைமை தாங்கினார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், உமாமகேஸ்வரி சிவக்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்