சாலையை கடக்க முயன்ற ஆசிரியர் பஸ் ேமாதி பலி
தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆசிரியர் பஸ் ேமாதி பலியானார்.
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவாணம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 57). ஆசிரியரான அவர் ஒதியத்தூரில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார். சொந்த வேலையாக வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்ட அவர் வெட்டுவாணம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக திருப்பத்தூரில் இருந்து சென்னையை நோக்கி வந்த ஒரு அரசு பஸ் திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சவுந்தரராஜன் உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். டிரைவர் திருப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் எனத் தெரிய வந்தது. மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.