மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

விக்கிரவாண்டி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-04-24 16:54 GMT
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே மாத்தூர் வி.எம். நகரி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி ராணி (வயது 62). சம்பவத்தன்று இவர் தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து ராணியின் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்