அணைக்கட்டு அருகே கிணற்றில் குதித்து ெபண் தற்ெகாலை
அணைக்கட்டு அருகே கிணற்றில் குதித்து ெபண் தற்ெகாலை செய்துகொண்டார்.
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த அரிமலை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் மோகனவேல் (வயது 34). பொறியியல் பட்டதாரியான அவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். மோகனவேல் அதே பகுதியைச் சேர்ந்த நிஷாந்தி (29) என்பவரை காதலித்து 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் அதேபகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் மோகனவேலுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக, சந்தேகப்பட்ட நிஷாந்தி இதுதொடர்பாக தனது கணவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
நிஷாந்தி காட்டுப்பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த வழியாகச் சென்றவர்கள் கிணற்றில் ெபண் பிணம் கிடந்ததைப் பார்த்து விட்டு வேப்பங்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமையிலான வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி விவசாயக் கிணற்றில் கிடந்த நிஷாந்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனவேலிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.