பாலக்கோடு அருகே கஞ்சா பயிரிட்ட வாலிபர் கைது

பாலக்கோடு அருகே கஞ்சா பயிரிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-24 16:42 GMT
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது25). இவர் தனது விவசாய நிலத்தில் மாட்டுத் தீவன பயிர்களுக்கிடையே ஊடுபயிராக கஞ்சா செடி பயிரிட்டு இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி சபரிநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அங்கு அவர் கஞ்சா செடி பயிரிட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சாமிநாதனை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடியை அழித்தனர்.

மேலும் செய்திகள்