காவேரிப்பட்டணத்தில் உறைகிணற்றை பேரூராட்சி தலைவர் ஆய்வு
காவேரிப்பட்டணத்தில் உறைகிணற்றை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் பேரூராட்சி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதற்காக தென்பெண்ணை ஆற்றில் உறை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த உறை கிணற்றை பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும் என்றும், அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது செயல் அலுவலர் முருகன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.