கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு லாரியில் கடத்த முயன்ற 1½ டன் குட்கா பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு லாரியில் கடத்த முயன்ற 1½ டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-04-24 16:41 GMT
தேன்கனிக்கோட்டை:
தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் கும்ளாபுரம் சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.அதில் குட்கா கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் சேலம் மாவட்டம் தென்னங்குடிபாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 24) என்பதும், கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு குட்காவை கடத்த முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1½ டன் குட்கா லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்