மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம்

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-04-24 16:41 GMT
திருவாரூர்:
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மாவட்டக்குழு கூட்டம் 
திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் இளைஞர் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில், பள்ளிகள்- கல்லூரிகள் மற்றும் பணியிடங்கள், பொது இடங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க வேண்டும். பாலின சமத்துவத்தை வளர்த்தெடுக்க பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வியை வழங்க வேண்டும். சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். 
சிறை நிரப்பும் போராட்டம் 
பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் வருகிற 30-ந் தேதி நடைபெறும் இளம் பெண்கள் மாநாட்டில் திருவாரூரில் இருந்து 250 இளம் பெண்கள் பங்கேற்பது. 
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி அடுத்தமாதம்(மே) 31-ந் தேதி மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்