கெலமங்கலம் ஒன்றியத்தில் ரூ3¼ கோடியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை

கெலமங்கலம் ஒன்றியத்தில் ரூ.3¼ கோடியில் தார்சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.

Update: 2022-04-24 16:39 GMT
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் முதல் எச்.செட்டிப்பள்ளி வரை ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்கம் பணி, இருதுகோட்டை-நமலேரி வரை ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கே.பி.தேவராஜ் தலைமை தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராம் முன்னிலை வகித்தார். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் திருமால்செல்வம், உதவி பொறியாளர் மன்னர்மன்னன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் நாகராஜ், துணை செயலாளர் குருராஜ், ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்