விவசாய தொட்டியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

விவசாய தொட்டியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியானார்

Update: 2022-04-24 16:32 GMT
துமகூரு: துமகூரு மாவட்டம் கொரட்டகெரே பேஜாபுரா கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மய்யா. இவரது மகன் அக்சய் (வயது 9). இந்த சிறுவன் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலையில் தனது சித்தப்பா மஞ்சுநாத்துடன் தோட்டத்திற்கு சிறுவன் சென்றிருந்தான். அப்போது தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று அக்சய் விளையாடியதாக தெரிகிறது. 

அந்த சந்தா்ப்பத்தில் தொட்டியில் இருந்த பாசியில் மிதித்ததால் கால் தவறி அக்சய் கீழே விழுந்தான். இதனால் அக்சய் தலையில் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினான். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவன் பரிதாபமாக இறந்து விட்டான்.

மேலும் செய்திகள்