மில் தொழிலாளர்கள் 2 பேர் பலி

சாலையோர சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மில் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். அவர்களது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-04-24 16:32 GMT
அன்னூர்

சாலையோர சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மில் தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். அவர்களது நண்பர் படுகாயம் அடைந்தார். 

மில் தொழிலாளர்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணசாமி(வயது 21) மற்றும் ஸ்ரீஜித்(25). இவர்கள் 2 பேரும், கோவை மாவட்டம் அன்னூரில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். 

இந்த நிலையில் இன்று மாலை 3.30 மணியளவில் கிருஷ்ணசாமி, ஸ்ரீஜித் ஆகியோர் தங்களது நண்பரான லூர்து சகாயராஜ்(25) என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் அன்னூர்-சத்தி சாலையில் சென்றனர். மோட்டார் சைக்கிளை கிருஷ்ணசாமி ஓட்டினார். 

சுவரில் மோதியது

உப்புத்தோட்டம் அருகே சென்றபோது திடீரென அவரது கட்டுப்பாட்டை மோட்டார் சைக்கிள் இழந்தது. தொடர்ந்து சாலையோரம் உள்ள பொதுக்கழிப்பிட சுவர் மீது பயங்கரமாக மோதியது. 
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு, பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அவர்களை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கிருஷ்ணசாமி மற்றும் ஸ்ரீஜித் ஆகியோர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். லூர்து சகாயராஜிக்கு முதலுதவி அளித்து, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்