போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-24 16:31 GMT
வால்பாறை

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு, கடந்த 14-ந் தேதி வக்கீல் சிவசுப்பிரமணியன் என்பவர் சுமார் 5 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலையை வாகனத்தில் கொண்டு வந்து அனுமதியின்றி இறக்கி வைக்க முயன்றதாக தெரிகிறது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், அம்பேத்கர் சிலையை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். இதை கண்டித்து இன்று வால்பாறை பழைய பஸ் நிலையம் முன்பு  அம்பேத்கர் சிலை மீட்பு குழுவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி நிர்வாகி செல்லமுத்து வரவேற்றார். 

ஆர்ப்பாட்டத்தில், வால்பாறையில் அம்பேத்கர் சிலை கட்டாயம் நிறுவப்படும், அதற்கான இடத்தை வருவாய்த்துறை ஒதுக்க வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டே அம்பேத்கர் சிலை வைப்பதற்கு இடம் ஒதுக்க நகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே அம்பேத்கர் சிலை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வக்கீல்கள் சிவசுப்பிரமணியன், சுமதி, விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி மோகன், சி.ஐ.டி.யூ. நிர்வாகி பரமசிவம், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்