சிறப்பு கிராமசபை கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிப்பு
சிறப்பு கிராமசபை கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணித்தனர்
சீர்காழி
சீர்காழி ஊராட்சி ஒன்றியம் கொண்டல் ஊராட்சியில் நேற்று அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் தலைைம தாங்கினார். ஊராட்சியில் எந்த அடிப்படை வளர்ச்சி பணிகளும் இதுவரை முறையாக மேற்கொள்ளவில்லை, கூட்டத்தில் பங்கேற்க உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை, ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது கழுத்தில் கருப்பு துண்டை அணிந்து கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொடங்கிய கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.