ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை முயற்சி
குழித்துறை அருகே குடும்ப தகராறில் ரெயில் முன் பாய்ந்த வாலிபர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில்:
குழித்துறை அருகே குடும்ப தகராறில் ரெயில் முன் பாய்ந்த வாலிபர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயங்களுடன் கிடந்த வாலிபர்
குழித்துறை அருகே உள்ள குன்னம்பாறை சுரங்கப்பாதையை அடுத்த ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு படுகாயங்களுடன் ஒரு வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதை பார்த்தவர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா்கள் விஜயகுமார், குமார்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விசாரணை
உயிர் தப்பிய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் பெயர் ராஜன் (வயது 35), காட்டாத்துறை கீழ மஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் என்றும், திருமணம் ஆகாத இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவர்களிடம் சண்டை போட்டு விட்டு வந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
ரெயில் மோதி படுகாயம் அடைந்த ராஜனை யாரும் கவனிக்காததால் அவர் தண்டவாளம் அருகே சுமார் 2 மணி நேரமாக கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.