புதிய மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

புதிய மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2022-04-24 15:46 GMT
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சிக்குட்பட்ட வடக்குத் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் மின்மோட்டார் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது. இந்த தெரு பகுதிக்கு சீரான மின்சாரம் கிடைக்காததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  ஆகவே, எங்கள் தெரு பகுதிக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்தனர்.
புதிய மின்மாற்றி
 பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 6 மாதத்துக்கு முன்பு தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வடக்குத் தெருவில் புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டு திறப்பு விழாவும் நடைபெற்றது. ஆனால் இதுநாள் வரை இந்த புதிய மின்மாற்றி பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த மின்மாற்றியை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்