சாராயம் விற்ற 4 பேர் கைது

மயிலாடுதுறையில் சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-04-24 15:41 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே உள்ள முளப்பாக்கம் அய்யனார் கோவில் திடலில் கள்ளத்தனமாக சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.
 அப்போது அங்கு கள்ளத்தனமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட முளப்பாக்கம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் மணிகண்டன் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 3 பேர் கைது
இதேபோல மன்னம்பந்தல் பழைய ெரயில்வே பாதையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட மன்னம்பந்தல் பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்த கிட்டப்பா மகன் கீர்த்திகேயன்(24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், மயிலாடுதுறை சேந்தங்குடி சுடுகாடு அருகே சாராயம் விற்ற சோழம்பேட்டை சத்யா காலனி தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை(37) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல ஆக்கூர் தாகூர் வீதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் மணிகண்டன் (31) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் சாராயம் விற்ற போது செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்