வீரபாண்டி அருகே மினி வேன் மோதி சிறுவன் பலி
வீரபாண்டி அருகே மினி வேன் மோதி சிறுவன் பலியானான்.
உப்புக்கோட்டை:
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் காஞ்சி. விவசாயி. இவருக்கு 1½ வயதில் சுதீஷ் என்ற மகன் இருந்தான். இன்று காலை இவன், தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிறுவனை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சுதீஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் காஞ்சி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி மேற்கு தெருவை சேர்ந்த மினி வேன் டிரைவர் முருகனை (43) கைது செய்தனர்.