அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வருகை தினம் கடைப்பிடிப்பு
அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வருகை தினம் கடைப்பிடித்ததை தொடர்த்து பகதர்கள் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.
பிரான்சிஸ் இருந்து 1914-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அன்னை மீரா முதல் முதலாக புதுச்சேரிக்கு வந்தார். இங்கு சில காலம் தங்கிவிட்டு மீண்டும் பிரான்சிற்கு திரும்பினார். அதன்பின், மகான் அரவிந்தரை ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டு 1920-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் நிரந்தரமாக தங்கினார். அதன்படி ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ந் தேதி அன்னை வருகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி அன்னை வருகை தினம் ஆசிரமத்தில் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர், அன்னை தங்கியிருந்த அறைகள் மற்றும் சமாதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரவிந்தர், அன்னை சமாதிகளை வணங்கினர். மேலும் ஏராளமான வெளிநாட்டினர், ஆன்மிக சிந்தனையாளர்கள், பக்தர்கள் பங்கேற்ற கூட்டு தியானமும் நடந்தது.