முத்தையாபுரத்தில் மதுவிற்றவர் கைது

முத்தையாபுரத்தில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-24 14:24 GMT
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது முத்தையாபுரம் பஜார் பஸ் நிறுத்தம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து செய்து கொண்டிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்றுக்கொண்டிருந்த மடத்தூரை சேர்ந்த தங்கமணி மகன் பச்சம்மால் (வயது 38) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து 7 மதுபாட்டில்கள், ரூ.200 -ஐ  பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்