குட்டிகளுடன் காட்டு யானைகள் தென்னந்தோப்பில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
குட்டிகளுடன் காட்டு யானைகள் தென்னந்தோப்பில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
பேரூர்
கோவை வனக்கோட்டம் தொண்டாமுத்தூர் இக்கரை போளு வாம்பட்டி வனச் சரகத்தில் தேவராயபுரம் பகுதி உள்ளது.
இதன் வடக்கே வனப் பகுதியில் இச்சிக்குழி என்ற இடத்தில் ஆதிநாராய ணன் கோவில் உள்ளது.
இங்கிருந்து நேற்று முன்தினம் காலை 3 குட்டிகள் உள்பட மொத் தம் 5 காட்டு யானைகள் வெளியேறின. அவை, குப்பேபாளையம் மலையடிவார பகுதியில் உள்ள ஆனந்த் என்பவரது தென்னந் தோப்புக்குள் புகுந்து முகாமிட்டது.
இதில் 2 குட்டி யானைகள், தோட்டத்து கம்பி வேலியை தாண்டி வெளியேறின. அதைத்தொடர்ந்து 2 யானைகள், குட்டிகளுடன் வெளியேற முயன்றன. அப்போது குட்டி யானையால் கம்பி வேலியை தாண்டி வெளியேற முடியாமல் நின்றது.
உடனே 2 பெரிய யானைகள் குட்டி யானையை துதிக்கையில் லாவகமாக அழைத்துக் கொண்டு வெளியேறியது. இதையடுத்து, யானைகள் வடக்கே வனப்பகுதி நோக்கி சென்றன.
இதை அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள், காட்டு யானை கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வதை கண்காணித்தனர்.
குட்டிகளுடன் காட்டு யானைகள் தென்னந்தோப்பில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.