இலக்கிய போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை
பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் நடந்த இலக்கிய போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருச்செந்தூர்:
பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் ‘ஒலிம்பஸ் 22' இலக்கிய போட்டிகள் நடந்தது. போட்டியில் ஆதித்தனார் கல்லூரி ஆங்கிலத்துறை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் குழு மெல்லிசை பாட்டு போட்டியில் முதல் பரிசும், குழு நாடகத்தில் 2-வது பரிசும், தனிமனித நாடகத்தில் 2-வது பரிசும், ஓவியப்போட்டி மற்றும் வினாடி-வினாவில் 3-வது பரிசும் பெற்றனர். கல்லூரிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஆதித்தனார் கல்லூரி 2-வது இடம் பெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன், ஆங்கில துறை தலைவர் சாந்தி ஆகியோர் பரிசு பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கவிதா மாணவர்களை ஊக்குவித்து இலக்கியப்போட்டிக்கு அழைத்து சென்றார்.