தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததாக, டி.சவேரியார்புரத்தை சேர்ந்த அய்யப்பன் மகன் அசோக் ராஜா (வயது 22), கோரம்பள்ளம், அய்யனடைப்பை சேர்ந்த முருகேசன் மகன் இசக்கி ராஜா (23) ஆகிய 2 பேரும், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்ராஜா, இசக்கிராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.