குன்னூர் அருகே கல்வி வளர்ச்சி குறித்த கலந்தாய்வு கூட்டம்

குன்னூர் அருகே கல்வி வளர்ச்சி குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.;

Update: 2022-04-24 13:38 GMT
ஊட்டி 

நீலகிரி மாவட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம் குன்னூர் கேத்தி அருகே உள்ள மைனலா கிராமத்தில் நநடைபெற்றது. இதில் நீலகிரியை சேர்ந்த நூற்றுகணக்கான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். கூட்டத்தில் நீலகிரியின் வளர்ச்சி குறித்தும், வேலை வாய்ப்பு மேம்பாடு குறித்தும், வேலைவாய்ப்புக்கான வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார் மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவ வசதிகள் குறித்து ஆலோசிக்க பட்டது இதில் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக ஊட்டிக்கு வந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, மாவட்ட கலெக்டர் அம்ரித் புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

மேலும் செய்திகள்