ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மருந்து வணிகர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊட்டி
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மருந்து வணிகர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில மாநாடு
ஊட்டியில் தனியார் திருமன மண்டபத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் மாநில மாநாடு மற்றம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுசெயலாளர் ரமேஷ், நீலகிரி மாவட்ட தலைவர் அப்சல் அலி ஆகியோர் முன்னில் வகித்தனர்.
கோவை, திருப்பூர் சேலம் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து 580 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள ஜி.எஸ்.டி வரி உயர்வை கைவிட வேண்டும். பொது மக்கள் நலன் கருதி அனைத்து மருந்து பொருட்களுக்கும், 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி நிர்ணயம் செய்யப் பட வேண்டும். ஆன்லைன் மருந்து வணிக அனுமதியை மத்திய அரசு கைவிடுவதோடு ரத்து செய்ய வேண்டும்.
கடையடைப்பு போராட்டம்
இல்லையென்றால் ஜூன் மாதம் தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மே 5-ந் தேதி திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்த உள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்கலந்து கொள்கிறார். இதில் ஆன்லைன் மருந்து வணிக அனுமதி கொண்டு வரப்படாமல் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை வைக்கப்படும். அனைத்து மருந்துகளுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி நிர்ணயம் செய்ய மருத்துவர்கள் மருந்து விற்பனை செய்ய மருந்து கட்டுபாடு லைசென்ஸ் பெற்று இருக்கவேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் உள்பட வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.