அர்ச்சகர் பயிற்சி பெற்ற தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அர்ச்சகர் பயிற்சி பெற்ற தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
வடவள்ளி
அர்ச்சகர் பயிற்சி பெற்ற தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வடவள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ஷாஜிராவ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சுதர்சன் முன்னிலை வகித்தார்
இதில், இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்ட குழு உறுப்பினரான பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்து கொண்டார்.
அப்போது சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடு பட்ட முன்னாள் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து, தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை பணிவரன்முறை செய்ய உத்தர விட்ட தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பணி நியமனம்
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி காலத்தில் நடத்தப் பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்த தகுதியான 200 பேரில் இதுவரை 24 பேருக்கு மட்டுமே பணி நியமன ஆணை வழங்கப் பட்டு உள்ளது.
தகுதியான மற்ற மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடையாக உள்ள குறைந்தபட்ச வயது வரம்பு ஏற்கனவே இருந்தது போல் 45 வயது வரை என திருக்கோவில் பணியாளர்கள் விதிகளில் 2020-ல் திருத்தம் செய்து வெளியிட வேண்டும்.
சைவ சமய மாநாடு
கோவில் பணியாளர்களை பணியிட மாறுதல் செய்ய வெளியிட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
நலிவுற்ற ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். தமிழகத் தில் உள்ள மடாதிபதிகளின் தலைமையில் சைவ சமய மாநாடு நடத்த வேண்டும்.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் வகையில் அறக்கட்டளை ஏற்படுத்துவது,
ஓய்வு பெற்ற கோவில் பணியாளர்களுக்கு தனி அமைப்பு உருவாக்குவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.