கார், எதிரே வந்த லாரியின் மீது மோதியதில் பஞ்சு வியாபாரி இறந்தார்
கார், எதிரே வந்த லாரியின் மீது மோதியதில் பஞ்சு வியாபாரி இறந்தார்
சரவணம்பட்டி
கோவை கோவில்மேடு தடாகம் பகுதியை சேர்ந்தவர் சாந்தப்பா (வயது58). பஞ்சு வியாபாரி. இவருடைய மனைவி மகாதேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சாந்தப்பா நேற்று தனது காரில் அன்னூர் நோக்கி கோவில்பாளையம் துடியலூர் சாலை யில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார், எதிரே வந்த லாரியின் மீது மோதியது.
இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்து சாந்தப்பா படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரி சோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.