ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட வேண்டும் என்று வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசினார்
ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட வேண்டும் என்று வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசினார்
சரவணம்பட்டி
ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட வேண்டும் என்று வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசினார்.
சிறப்பு கிராம சபை கூட்டம்
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான நேற்று தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்
இதையொட்டி கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் வெள்ளானைப்பட்டி ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஊராட்சியில் செய்யப்படும் பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்த 15 தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் செல்லமுத்து வாசித்தார்.
இதைத் தொடர்ந்து வீட்டிற்கு பட்டா, தார்ச்சாலை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மக்களின் வாழ்வாதாரம்
இதில் கலெக்டர் சமீரன் பேசியதாவது
ஊராட்சியில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டவும் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வீடுகளுக்கு குடிநீர், சாக்கடை வசதி செய்து தர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், மின்விளக்கு போன்றவை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படும்.
விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை சிறந்த முறையில் செயல் படுத்த வேண்டும்.
ஊராட்சிகளில் ஒப்பந்த தூய்மை பணியாளர் களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் அதிகப்படுத்தி தரப்படும்.
ஊராட்சிகளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல திட் டங்களை செயல்படுத்தி உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அரசு அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து அனைத்து வித கட்டமைப்புகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் வெள்ளமடை, கள்ளிப்பாளையம், அக்ரகார சாம குளம், அத்திப்பாளையம், கொண்டயம்பாளையம், கீரணத்தம் ஆகிய ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.