கருமத்தம்பட்டியில் பெயிண்ட் லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

கருமத்தம்பட்டியில் பெயிண்ட் லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-04-24 13:27 GMT

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டியில் பெயிண்ட் லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.

லாரி கவிழ்ந்தது

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. அதன் அருகே நேற்று மதியம் ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு பெயிண்ட் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. 

அதை டிரைவர் பிரவீன் (வயது35) ஓட்டி வந்தார். அவருடன் மற்றொருவரும் இருந்தார்.

இந்த நிலையில் லாரி அங்குள்ள தனியார் கல்லூரி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது. 

தீப்பற்றி எரிந்தது

உடனே திடீரென்று லாரி தீப்பற்றி எரியத் தொடங்கியது. அதில் பெயிண்ட் இருந்ததால் கரும்பு புகையுடன் குபுகுபுவென தீப்பற்றி எரிந்தது. இதனால் லாரியில் இருந்த பெயிண்ட் உருகி சாலையில் ஓடியது. 

மேலும் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் மற்றும் சூலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதில் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு லாரியில் கொழுந்து விட்டு எரிந்த தீயை போராடி அணைத்தனர். 

மேலும் வழிந்தோடிய பெயிண்டிலும் தீ எரிந்தது. அதையும் தீயணைப்பு துறை வீரர்கள் அணைத்தனர். ஆனாலும் லாரி முழுவதுமாக தீப்பற்றி எரிந்து நாசமானது.

2 பேர் மீட்பு

இதற்கிடையே தீப்பிடித்த லாரியில் இருந்த டிரைவர் பிரவீன் (35) உள்பட 2 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 

பின்னர் அவர்கள் 2 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் பெயிண்ட் லாரி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்