“தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமா? ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படியுங்கள்” - அமித்ஷா பேச்சு
தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால் ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
அரசு முறை பயணமாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி வந்துள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து பல்கலைக்கழக கருத்தரங்கு கூட்டத்தில் நடைபெற்ற ஸ்ரீ அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேசத்தின் ஆன்மாவை அறிய வேண்டுமானால் ஸ்ரீ அரவிந்தரின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.