திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் முழுவதும் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை இந்து அறநிலையதுறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை வடபழனி கோவிலில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-24 11:09 GMT
இதனையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு, நகர்மன்ற தலைவர் சரஸ்வதி, கோவில் இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி, நகர்மன்ற துணை தலைவர் சாமிராஜ், உள்ளிட்டோர் பங்கேற்று பிரசாதத்தை வழங்கினார்கள். பிரசாதத்தை பெற்றுக்கொண்ட பக்தர்கள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்