இலவச மருத்துவ முகாம்
மிட்டாளம் கிராமத்தில் கலைஞரின் வருமுன்காப்போம் திட்டத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஆம்பூர்
மிட்டாளம் கிராமத்தில் கலைஞரின் வருமுன்காப்போம் திட்டத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
ஆம்பூரை அடுத்த மிட்டாளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், ஆம்பூர் நகரமன்ற துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின்போது 25 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மாதனூர் ஒன்றிய குழு துணை தலைவர் சாந்தி சீனிவாசன், திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சசிகலா சாந்தகுமார் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் உடனிருந்தனர்.