வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வல்லூா் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Update: 2022-04-24 10:12 GMT
மீஞ்சூர் அடுத்த வல்லூர் கிராமத்தில் தேசிய எரிசக்தி துறையும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து வல்லூர் அனல் மின் நிலையம் அமைத்தனர். இதில் மூன்று யூனிட்டில் தலா 500 வீதம் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 3-வது யூனிட்டில் உள்ள கொதிகலன் குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை சீர் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்