துணை மின் நிலையத்தில் தீ விபத்து
மாத்தூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பூமியில் புதைக்கப்பட்டு மின்சாரம் செல்லும் கேபிள் வெடித்து தீப்பிடித்தது. இதில் அருகில் இருந்த கேபிள், கழிவுகள் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் துணை மின் நிலையத்தில் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. முறையாக பராமரிக்காமல் இருந்ததால் கேபிள் வெடித்து தீப்பிடித்ததா? கேபிள் வெடிப்பதற்கு என்ன காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.