கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-04-23 22:01 GMT
கெங்கவல்லி,
கெங்கவல்லி அருகே சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில், கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்யும் போது கசிவு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கபடவில்லை. இந்தநிலையில் வீடுகளை சீரமைத்து தரக்கோரி நேற்று கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, வீடுகளை சீரமைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்