கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.6½ கோடிக்கு வர்த்தகம்

கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.6½ கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.

Update: 2022-04-23 22:01 GMT
எடப்பாடி,
வாரச்சந்தை
எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது. ஆடுகள், கோழிகள் மற்றும் காய்கறிகளை பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். மொத்தம் 6,500 ஆடுகள், 3,000 கோழி, சேவல்கள் மற்றும் 110 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.4,700 முதல் ரூ.5,900 வரையும், 20 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.9,600 முதல் ரூ.10,500 வரையும், குட்டி ஆடு ஒன்று ரூ.2,500 முதல் ரூ.3,500 வரையும் விற்பனை செய்யப்பட்டன. 
காய்கறிகள்
மேலும் 7 கிலோ எடை கொண்ட ஒரு கூடை புளி ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. 60 கிலோ எடையுள்ள சின்ன மற்றும் பெரிய வெங்காயம் ரூ.1,400 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்பட்டது. 
மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள கோவில்களில் சித்திரை திருவிழா நடந்து வருவதால் அதிகளவில் ஆடு, கோழி மற்றும் காய்கறிகள் விற்பனையானதாகவும், ரூ.6 கோடியே 50 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்