பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்: கைதான 2 பேர் சிறையில் அடைப்பு

ஆத்தூரில் பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Update: 2022-04-23 21:09 GMT
ஆத்தூர், 
பிளஸ்-2 மாணவி கருக்கலைப்பு
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் உடலில் மாற்றங்கள் தெரிந்தன. இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்ததில், அவரை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததும், தற்போது கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மாணவியை பெற்றோர் சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஒரு ஆஸ்பத்திரியில் மாணவியின் வயிற்றில் உருவான கருவை கலைத்தனர். இது குறித்து குழந்தைகள் நல பாதுக்காப்பு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை
அந்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் புதுச்சேரி சேரன் நகரை சேர்ந்த திவாகரன் (வயது 33), இவருடைய உறவினரான ஆத்தூர் முல்லைவாடியை சேர்ந்த சங்கர் (43) ஆகியோர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
மேலும் திவாகரன் வேலை விசயமாக ஆத்தூர் வந்தபோது அவருக்கு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த திவாகரன் உறவினரான சங்கர், இந்த விசயத்தை பெற்றோரிடம் சொல்லி விடுவதாக மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இதையடுத்து போலீசார் திவாகரன், சங்கரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்