பண்ணாரி அம்மன் கோவிலில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்

பண்ணாரி அம்மன் கோவிலில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.;

Update: 2022-04-23 21:08 GMT
சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவிலில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
பிரசாத திட்டம்
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற 10 கோவில்களில் பக்தர்களுக்கு பொங்கல், புளியோதரை, லட்டு உள்ளிட்ட பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. அந்த 10 கோவில்களில் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவிலும் ஒன்றாகும்.
இந்த திட்டத்தை நேற்று சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கிவைத்தார். 
பக்தர்களுக்கு...
அதன்படி பண்ணாரி அம்மன் கோவிலிலும் நேற்று முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான தொடக்க விழா நேற்று கோவிலில் நடைபெற்றது. சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி பக்தர்களுக்கு பிரசாதத்தை வழங்கி தொடங்கி வைத்தார். 
இந்து சமய அறநிலையத்துறையின் ஈரோடு இணை ஆணையர் மங்கையர்கரசி, கோவில்  துணை ஆணையர் சபர்மதி, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் மற்றும் அறங்காவலர்கள் கோவில்   அலுவலர்கள் விழாவில் கலந்துகொண்டார்கள். 

மேலும் செய்திகள்